search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்"

    • ரெயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய குழு நியமனம்.
    • ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கையால் பயணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல உணவு கிடைக்கும்.

    மும்பை- கோவா இடையேயான சிஎஸ்எம்டி- மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணிக்கு வழங்கிய உணவில் மனித விரல் நகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வீடியோ எடுத்த பயணி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

    இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரெயில்வே அளிக்கும் உணவின் தரத்தால் பாதிக்கப்பட்டதாக பலரும் தங்களின் மோசமான அனுபவத்தை பகிர்ந்தனர்.

    இதுகுறித்து இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்திற்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது.

    மேலும் இதுதொடர்பாக, ஐஆர்சிடிசி கூறுகையில், "ரெயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதில் அதிகாரி ஒருவர் வந்தே பாரத் விரைவு ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை ஐஆர்சிடிசி ரத்னகிரியில் உள்ள கிச்சனை முழுமையாக சோதனை செய்தது.

    ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கையால் பயணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல உணவு கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தது.

    • திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
    • பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூரு வருகிறார். அவர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வருகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். அதே விழாவில் கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார். அதன் பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் அன்றைய தினம் பிரதமர் மோடி இந்தியாவின் 5-வது மற்றும் தென்இந்தியாவின் முதல் அதிவேகமாக செல்லும் சென்னை - மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

    விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு வந்து பட்டமளிப்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    ×